பிரதமர் மோடியின் கரங்களில் இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது - ஜோதிராதித்ய சிந்தியா

" alt="" aria-hidden="true" />


 


புதுடெல்லி:

மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல் மந்திரி கமல் நாத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.


அப்போது செய்தியாளர்களிடையே பேசிய ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:-

மக்களுக்கு சேவை செய்வதே எனது குறிக்கோள். இதை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாகத்தான் அரசியலை நான் பார்க்கிறேன்.


காங்கிரஸ் கட்சி முன்பிருந்ததைப்போல் இப்போது இல்லை. யதார்த்த நிலமைகளை ஏற்பதற்கு அக்கட்சி மறுக்கிறது. முன்னர் இருந்த அமைப்பில் (காங்கிரஸ்) இருந்தவாறு எனது மக்களுக்கு சேவை செய்ய இயலாத நிலையைக்கண்டு நான் வேதனை அடைந்தேன்.

மக்களுக்கு சேவையாற்ற ஒரு தளத்தை அமைத்து தந்ததற்காகவும்
பாஜக குடும்பத்தில் இணையுமாறு எனக்கு அழைப்பு விடுத்தமைக்காகவும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களில் இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளதாக நான் உணர்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்

Popular posts
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி வண்ணாங் குளத்தில் அமைந்துள்ள புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு
Image
திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையினர் அனைவருக்கும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்கள் கை சுத்திகரிப்பானை ( Hand Sanitizer) வழங்கினார்
Image
கொரோனா பாதிப்பு - இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒத்துழைப்பு மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Image
வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில்* *முதன்மைக்கல்வி அலுவலர் சா.மார்ஸ் தலைமையில்*
Image